வெளிநாட்டிலிருந்து மனைவி அனுப்பிய பணம் : கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன்
மாத்தளை மாவட்டத்தின் நாவுல பிரதேசத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
நண்பர் ஒருவர் மற்றொரு நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நிரோஷன் மதுசங்க குமாரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடூரமாக கொலை
நாவுல, நிகுலா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கடனாகக் கொடுத்த 75 ஆயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது, நிகுலா பகுதியில் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ஒரு விவசாயி ஆகும். அவர் தனது நான்கு வயது மகனுடன் சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார்.
அவரது மனைவி வீட்டு வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது மருமகள் அனுப்பிய பணத்தை ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டு, சிறிது காலமாக அது கிடைக்கவில்லை எனவும் அதனால் பகலில் பணத்தை மீள கோர சென்றதாகவும் உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
