அடுத்த பொதுத் தேர்தல் களத்தில் மகிந்தவுக்கு பதிலாக இளைய புதல்வர்?
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அலுவலகம் ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி குருணாகலில் திறக்கப்படவுள்ளது. அந்த அலுவலகத்தின் பிரதானியாக தற்போது பிரதமரின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றும் அவரது இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனடிப்படையில் ரோஹித்த ராஜபக்ச, குருணாகலில் உள்ள பிரதமரின் இந்த அலுவலகத்தில் இருந்தவாறு பிரதமரின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வார் என பேசப்படுகிறது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக அடுத்த பொதுத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடக் கூடும் என பலர் கருதுகின்றனர்.
அது மாத்திரமல்லாது ரோஹித்த ராஜபக்ச கடந்த காலங்களில் குருணாகல் மாவட்டத்திற்கு சென்று சமூக நலன்புரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
குருணாகலில் திறக்கப்படவுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த சகல பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
