மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்! - பொலிஸார் வெளியிட்ட தகவல்
பாணந்துறை பின்வத்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்டப்பட்மை தொடர்பில் முக்கிய தடயங்கள் பல கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த பெண், கடவத்தையிலுள்ள இரவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் கணேமுல்லையில் வசிக்கும் 26 வயதுடையவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 28ஆம் திகதி இரவு இலத்திரனியல் ஊடகங்களில் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பான செய்தி வெளியானதை பார்த்த பெண்ணின் நண்பர் ஒருவர் பொலிஸாருக்கு வந்து அவர் குறித்த முக்கிய தடயங்களை வழங்கியதாக அதிகாரி தெரிவித்தார்.
பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஹோட்டலில் தான் தங்கியிருந்த டிக்-டாக் காணொளியை அந்த பெண் தனக்கு அனுப்பியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
குறித்த பெண் கடந்த 26ஆம் திகதி சுற்றுலா விடுதியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தெரிவித்த போதிலும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து அவ்வாறான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணுக்கு சொந்தமாக கைப்பை சுற்றுலா விடுதிக்கு இருகில் உள்ள கடற்கரையில் எரிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவரது வழக்கமான தகவல்களை வெளியிடுவதில் பெரும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.