எரிவாயு வெடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இளம் பெண் - தந்தை வெளியிட்ட முக்கிய தகவல்
வெலிகந்த பிரதேசத்தில் அண்மையில் தீ பற்றி எரிந்தமையினால் உயிரிந்ததாக கூறப்படும் பெண்ணின் தந்தை பல விடயங்களை ஊடகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
திம்புலாகல, பெலட்டிய பகுதியை சேர்ந்த 51 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் தந்தை, மகளின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் வெலிகந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தந்தை கருத்து வெளியிடுகையில், “மகள் கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். எனினும் அடுப்பு பற்றாமையினால் தீப்பெட்டியை தேடி தீப்பற்றற வைத்துள்ளார். அதன் பின்னர் வீடு தீப்பற்றியுள்ளது. அவ்வளவே எனக்கு தெரியும்.
முதலில் வெலிகந்த வைத்தியசாலைக்கு என்னை அழைத்து சென்றார்கள். அதற்கு பின்னர் பொலன்னறுவைக்கு அனுப்பி வைத்தார்கள். பொலன்னறுவை வைத்தியசாலையிலேயே மகளை பார்த்தேன். கேஸ் அடுப்பில் தீப்பற்றிவிட்டது அப்பா என்று மாத்திரமே மகள் கூறினார்.
எனது மகளின் முகம் முழுவதுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு அடுப்பு எரியாமையினால் தீக்குச்சியில் பற்ற வைக்க முயற்சித்து சிலிண்டர் வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஊடகமொன்று பொலிஸ் அதிகாரியிடம் வினவிய போது, சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது உடலில் தீ வைத்துக் கொண்டமையினாலேயே மரணம் ஏற்பட்டதாகவும், எரிவாயு கசிவினால் இந்த மரணம் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri