யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation
By Dhayani Oct 30, 2024 01:41 PM GMT
Report

அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் யுவதியொருவர் காதலனினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

இன்று (30) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் நகரிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய காதலன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதி படுகாயமடைந்துள்ளார்.

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

 

யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது | Young Woman Was Stabbed With A Sharp Weapon

அனுராதபுரம் பொலிஸார் விசாரணை

இதன்போது பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகின்றது.

யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது | Young Woman Was Stabbed With A Sharp Weapon

தன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்த காதலனிடம் கத்தியும் விச போத்தலும் இருப்பதை அறிந்த யுவதி  அவரிடமிருந்து தப்பித்து சுமார் 500 மீற்றர் தூரம் ஓடிய நிலையில், காதலன் யுவதியை துரத்திச் சென்று தன்னிடமிருந்த கத்தியால் யுவதியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவத்தை அவதானித்த சிலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதல் நடத்திய காதலன் என கூறப்பட்ட நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட நிலை

அழகுசாதன பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

அழகுசாதன பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US