திருமணத்திற்காக அவுஸ்திரேலியா செல்ல ஆயத்தமான யுவதிக்கு நேர்ந்த கதி
திருமணத்திற்காக அவுஸ்திரேலியா செல்ல ஆயத்தமான யுவதியொருவர் கடவுச்சீட்டு இல்லாத காரணத்தினால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டை புதுப்பிக்க வந்த மணப்பெண்ணுக்கு, எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இணையம் மூலம் விண்ணப்பித்து கைரேகை அடையாளங்களை வழங்க வந்தபோது, குடிவரவு அலுவலக அதிகாரிகள் கடவுச்சீட்டை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது.
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
திட்டமிட்டபடி வராவிட்டால் அதனை கைவிடுவதாக அவுஸ்திரேலியர் தெரிவித்ததையடுத்து குறித்த யுவதி அழுது புலம்பியவாறு அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளார்.
எனினும் தற்போதுள்ள நடைமுறைகளுக்கமைய குறித்த யுவதிக்கு கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்போது பிரச்சினைகளை தீர்க்க நியமிக்கப்பட்ட அதிகாரி நேரம் ஒதுக்கியவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளார். .
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், திட்டமிட்ட வகையில் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை குறித்த யுவதிக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மிக அவசரமாக கடவுசீட்டை பெற இருப்பவர்கள் மாத்திரம் சாதாரண கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் ஒக்டோபர் மாதத்திற்கு முதல் அநாவசியமாக கடவுச்சீட்டை பெறுவதை தவிர்க்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
