கனடாவில் கோர விபத்தில் சிக்கி பலியான இளம் பெண்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 17 வயது சிறுமியொருவர் பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விபத்தினை ஏற்படுத்திய குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நோர்த் யோக் பகுதியில் ஒலிவியா (17) மற்றும் அவரது சகோதரி ஜூலியா ஆகியோர் சாலையை கடக்க முயன்ற போது காரொன்று வேகமாக வந்து இருவர் மீதும் மோதியுள்ளது.
இதன்போது ஒலிவியா பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்தினை ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பின்னர் விபத்தினை ஏற்படுத்திய நபர் தானே முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றவாளிக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு வருடங்கள் வாகனங்களை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையை அறிவிப்பதற்கு முன்னர் தன்னால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.