இலங்கையில் சமையல் எரிவாயு வெடிப்பினால் யுவதி பலியானாரா? பொலிஸார் வெளியிட்ட தகவல்
இலங்கையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறும் சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி வீடொன்றில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய பகுதியை சேர்ந்த ஆயிஷா குமுதுனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் எவரும் இல்லாமையால் அயலவர்கள் வருகை தந்து சமையல் அறை முழுவதும் எழுந்த தீயை அணைத்து குறித்த பெண்ணை வெலிக்கந்த பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிய வருகிறது.
எனினும் புதிதாக வீட்டுக்கு கொண்டு வருகின்ற எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக கையாளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த யுவதி தற்கொலை செய்யும் நோக்கில் உடலில் மண்ணெணய் ஊற்றியமையினால் பற்றி எரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவ்வாறான எதுவும் இல்லை எனவும் எரிவாயு வெடிப்பினால் மகள் உயிரிழந்ததாக அவரின் தந்தை குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri