லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இளம் பெண்! பொலிஸார் விடுத்துள்ள உடனடி கோரிக்கை
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் பூங்காவிற்கு அருகில் இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
லண்டனின் Cator பூங்காவில் உள்ள Onespace Community மையத்திற்கு அருகில், நேற்று மாலை சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் சில தகவல்கள் தெரிந்தாலும், இதுவரை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ள முடியுமெனவும்,அவை இரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
