சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இளம் யுவதி உயிரிழப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
எரிவாயு அடுப்பு அல்லது குழாயில் கசிவு
நேற்றுப் பகல் தனது வீட்டின் சமையல் அறையில் மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது ஏற்பட்ட கடும் தீக்காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சமையல் அறையிலுள்ள எரிவாயு அடுப்பு அல்லது குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளைப் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam