வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி பலி
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி, இன்றையதினம் (18.03.2024) காலை உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் வீட்டின் கிணற்று மோட்டார் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அதனையடுத்து, மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது யுவதி கிணற்றில் விழுந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே உயிரிழந்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
