பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்
ஹைலெவல் வீதி மீகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளைப் பெற்று கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு சென்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த சிறுவன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ஆனந்த கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் ஹெட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த வினிது சத்சர என்பவரே உயிரிழந்துள்ளார்.
காருக்கு பலத்த சேதம்
சிறுவனின் தந்தை மற்றும் காரை ஓட்டிச் சென்றவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
