ராகம வைத்தியசாலையில் இளம் கர்ப்பிணி தாய் உயிரிழப்பு! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ராகம போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார பிரிவினரின் அலட்சியத்தால் இளம் கர்ப்பிணி தாயும், அவரது வயிற்றிலிருந்த மூன்று கருக்களும் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்த கிரிபத்கொட, மாகொலவில் பகுதியை சேர்ந்த 36 வயதான லவந்தி ஜயசூரிய என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், தனியார் மருத்துவமனையொன்றில் குறித்த பெண்ணுக்கு குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மூன்று குழந்தைகளை கருவில் சுமந்துள்ளார்.
இதனையடுத்து இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் அலட்சியம்
இதன்போது வைத்தியசாலையில் ஏற்பட்ட அலட்சியத்தினால் கருவொன்று தரையில் விழுந்து உயிரிழந்த பின்னரே வைத்திய அதிகாரிகள் கவனம் செலுத்தியதாக உயிரிழந்த பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து வயிற்றிலிருந்த ஏனைய இரண்டு கருக்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதுடன், இளம் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் தனது மகளையும்,மூன்று பேரப்பிள்ளைகளையும் இழந்துள்ளதாகவும், சிசுக்களை இதுவரை குடும்பத்தினரிடம் காண்பிக்கவில்லையெனவும் லவந்தியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலத்தின் மீதான இறுதிக் கிரியைகள் நேற்று பமுனுவில பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
