குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்ட இளைஞன்: பகிரங்கப்படுத்தும் சரவணபவன் (Video)
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சேர்ந்த இளைஞன் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என வடமாகாண சரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரட்ணவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர பாதம் சரவணபவன் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் மற்றும் பிரதேசத்தில் எழுந்துள்ள
நிலைமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு விளங்கப்படுத்தினேன்.
அது மட்டுமல்லாது வட்டுக்கோட்டை பொலிஸார் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவரிடம் விவரமாக கூறினேன்.
அனைத்து விடயங்களையும் செவிமடுத்த பொலிஸ் மா அதிபர் குறித்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை கிடைத்ததும் நீதியான விசாரணை ஒன்றை தாம் மேற்கொள்வதாக உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
