வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார்.
தேடும் பணி
இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
எனினும் இளைஞன் இதுவரை கண்டுபிடிக்கபபடவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்த ஹசன் குணவர்த்தன என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மேலும் ,குறித்த இளைஞனை தேடும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri