கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞர்! விசாரணையில் வெளியான காரணம்
பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், அவருடைய தந்தை மற்றும் சகோதரனால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை நேற்று (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவருடைய,தந்தை மற்றும் சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இருவரும் தடிகள் மற்றும் கற்களால் தாக்கி இந்த கொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை உயிரிழந்த 29 வயதுடைய இளைஞர், தனது மகள், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் குறித்த பகுதியில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய தந்தையும் 18 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.