முதலையின் வாயில் கையை விட்ட இளைஞன்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
முதலை ஒன்றை காப்பாற்றுவதற்காக அதன் வாயில் இளைஞர் ஒருவர் கையை விட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கவடயாகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை நதியில் 13 அடி உயரமான முதலை ஒன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.
கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டிலை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
முதலையை கரைக்கு கொண்டு வந்ததும் உதார சஞ்சீவ என்ற இளைஞன் முன் வந்து முதலையின் வாயில் கையை வைத்து கேபிள்களால் தயாரிக்கப்பட்ட தூண்டிலை வெளியே எடுத்துள்ளார்.
மரத்தில் முதலையைப் பாதுகாப்பாகக் கட்டி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தூண்டிலை அகற்ற அவருக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்பட்டுள்ளன.
இவ்வாறு காப்பாற்றப்பட்ட முதலை பின்னர் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
