யாழில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பலி!
யாழ்ப்பாணம் - புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல் நீரேரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளார்.
இன்று(22/12/2025) நடந்த இந்த துயர சம்பவத்தில், ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் சாரூஜன் எனும் 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
கடல் நீரேரியில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போயுள்ளார்.

இதனை அவதானித்தவர்கள் கடல் நீரேரியில் இறங்கி இளைஞரை தேடிய நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இளைஞரை சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.