பௌத்த தேரரை இப்படி இழுத்துச் செல்வீர்களா..? வேலன் சுவாமிக்காக களமிறங்கும் தமிழ் அரசியல்வாதிகள்
சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(22/12/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை
மேலும், நேற்றைய தினம் தையிட்டியில் நடைபெற்ற சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெளத்த பிக்கு ஒருவர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லப்படுவாரா என கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த பதற்ற நிலை காரணமாக, தற்போது வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது தமிழ்க்குடிமகன் அனைவரும் ஒன்றிணைய தயார் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால் குறித்த விடயம் தொடர்பாக எமக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கப்படவில்லை.
அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்திக்கப்பட வேண்டும் என்றும் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கஜேந்திரகுமார் மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் தொடர்பாகவும் கடுமையாக விமர்சித்தும் மணிவண்ணன் பேசியுள்ளார்.
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam