தமிழர் பகுதியில் அதிக போதைப்பொருள் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
23 அகவையுடைய 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பத்தாம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப் பொருள் பாவித்து வந்துள்ளார்கள்.இதில் ஒருவர் அதிகளவான ஐஸ் போதை பொருள் உட்கொண்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏனைய இருவரும் குறித்த நபர் மயங்கி விழுந்ததை பார்த்து விட்டு குறித்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்ந பொலிஸார் பற்றைகாட்டுக்குள் மயங்கி விழுந்து கிடந்த இளைஞனை மீட்டு புதுக் குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
போதைப் பொருள் பாவனை
இந்தநிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அதிகளவான போதைப் பொருள் பாவனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
