முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஆறு பேருக்கு விளக்கமறியல்
கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை 14நாள்விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் நேற்றுமுன்தினம் (21.05.2025) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித் தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட ஆறுநபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது ஆறு பேரையும் 14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புத்தள மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் கொக்குதொடுவாய் பகுதியை சேர்ந்த ஒருவருமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
