வாக்குச்சீட்டை இரண்டாக கிழித்த இளைஞன் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்று வரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.
தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச்சீட்டையே குறித்த இளைஞன் இரண்டாக கிழித்துள்ளார்.
குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை
தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேவை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம்! வெளியானது அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
