பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணைத் தாக்கிய இளைஞன்: வெளியான தகவல்
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவர், கஞ்சா போதைப் பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு பொய் தகவல்களை வழங்கியதாக மனைவி, குறித்த இளைஞனை குற்றம் சுமத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு செய்த பெண்
இந்நிலையில், குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக இளைஞனை அழைத்த போது, குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து முறைப்பாடு செய்த பெண்ணை தாக்கியதாகவும் தெரியவருகிறது.
கணவர் போதைப் பொருள் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவல்களை
வழங்கியதாக கூறி, முறைப்பாடு செய்த பெண்ணின் கணவர் கடந்த முதலாம் திகதி மொரவெவ
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
