கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ். இளைஞன்
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL-263 விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.
கடவுச்சீட்டு
இதன்போது குறித்த இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். ஆள்மாற்றம் செய்யப்பட்டு கடவுச்சீட்டு பெறப்பட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைக்காக 1.8 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதாக சந்தேக நபரான இளைஞன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri