புத்தளத்தில் மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய இளைஞன் கைது
புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தணி பகுதியில் நேற்று இரவு 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அப்பகுதியில் கண்ணாடி உடைகின்ற சத்தத்தை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் மக்கள் ஒன்றுகூடி பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் குறித்த பகுதிக்கு உடனடியாக சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞர் கற்பிட்டி பாலக்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சந்தேக நபர் போதையிலிருந்ததாக பொலிஸார் கூறினர். விசாரணைகளை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை புத்தளம், கற்பிட்டி, நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan