வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் விசேட அதிரடி படையினரால் திடீர் கைது
வவுனியாவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நூதன முறையில் போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அதிரடிப்படையினர் சந்தேகநபரையும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சோதனையிட்டபோது, மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்குள் மறைத்துவைக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கை
இந்நிலையில் சம்பவ இடத்தில் வைத்து அதிரடிப்படையினர் சந்தேகநபரை கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் 24 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
37 பேர் கைது
இந்த நடவடிக்கையின் போது 299 கிராம் ஹெராயின் போதைபொருள், 172 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,233 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 37 பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 299 கிராம் ஹெராயின் போதைபொருள், 172 கிராம் ஐஸ் போதைப்பொருள், 4 கிலோ 400 கிராம் கஞ்சா, 26,075 கஞ்சா செடிகள், 522 கிராம் மாவா போதைப்பொருள் , 34 கிராம் தூல் போதைப்பொருள் மற்றும் 1233 போதை மாத்திரைகள் போதைபொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |