கொழும்பில் வைத்தியரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஆசிரியை
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னதாக, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததற்காக இதே மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியையாகப் பணியாற்றிய இனேஷா என்ற பெண் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பித்தப்பைக் கற்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை
அங்கு விசேட வைத்தியர் ஹசஞ்சய குணவர்தன தலைமையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று மாதங்களின் பின்னர், பெண் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் ஐந்தாவது பிரிவிற்கு மாற்றப்பட்டு, பின்னர் ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு, அவர் கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டியிருந்தது, குழாய் உதவியுடன் உணவு மற்றும் பானங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.
வைத்தியசாலையின் அறிவிப்பின் அடிப்படையில் குறித்த பெண் சத்திரசிகிச்சைக்காக வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராகம போதனா வைத்தியசாலை
சத்திரசிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய அவர் சுவாசக் கோளாறு காரணமாக ராகம போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அறுவைசிகிச்சை செய்த அறுவை சிகிச்சை நிபுணரின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜாஎல, தெலத்துர பிரதேசத்தில் வசிக்கும் யுவதியொருவர் தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |