போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம்பெண் கைது
திவுலப்பிட்டிய பகுதியில் பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் பெண்ணிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெண்ணுக்கு விளக்கமறியல்...
இதளை தொடர்ந்து, குறித்த பெண்ணை விசாரித்ததில், இந்தக் கடத்தல் சிறிது காலமாக நடந்து வருவதும், போதைப்பொருள் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதும் தெரியவந்தது.
மேலும், அப்பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாய்க்கு அதிகம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மினுவாங்கொடை நீதிமன்றத்தில் அப்பெண்ணை முன்னிலைபடுத்திய நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |