யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழில்(Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம்(21) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) என்ற குடும்பப் பெண் என தெரியவந்துள்ளது.
மேலதிக சிகிச்சை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மூளை காய்ச்சல்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மூளை காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
