யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்
யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.
புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தீப்பற்றியதால் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது.
பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார்.
கிருமித்தொற்று
இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.மானிப்பாய் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.
தீ காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 17 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
