இளம் குடும்ப பெண் கடத்தப்பட்டதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது ஆண் ஒருவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவரைக் காதலித்துக் கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று குறித்த பெண் தங்கியிருந்த வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீட்டிற்கு வானில் வந்த நபர்கள் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டுக் குறித்த பெண்ணை கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam