முல்லைத்தீவு ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவு(Mullaitivu) மாங்குளம் ஏ-9 வீதியின் கிழவன் குளம் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிக்கன் குளம் மாங்குளத்தை சேர்ந்த சுப்பையா சிறிதரன் (வயது-41)என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியின் கிழவன் குளம் பகுதியில் கடந்த 28ம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்ஃ
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
