யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(30) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணியம் தசிகரன் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கிருமி தொற்று
மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 5 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri