இளம் தம்பதியினரின் மோசமான செயல்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
தவறான காணொளிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
விசாரணையின் போது, கொள்ளுப்பிட்டியில் முன்னர் வசித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு தம்பதியினர் இருந்ததும் அவர்கள் மோசடியில் நேரடியாக ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு தம்பதியினரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட தம்பதியர்கள் ஐஸ் மற்றும் கஞ்சா கலந்த மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
