இளம் ஜோடிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி - உயிரிழந்த யுவதி தொடர்பான தகவல்
கொஸ்லாந்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இரவுப் பொழுதை கழித்த இளம் ஜோடியை காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார். 23 வயதான கவிசா இயூஜின் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 23 வயதான தனுஷ்க மற்றும் இயூஜின் நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருதால் பிரபலயம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு காணொளி ஒன்றை பதிவு செய்யும் நோக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் உடதியலுமை பகுதிக்கு இந்த இளம் ஜோடி சென்றிருந்தது.
எனினும், இந்த பயணம் இயூஜினின் இறுதிப் பயணமாகவே அமைந்தது. காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராம மக்கள் இன்று காலை சென்று பார்த்த போது தனுஷ்க மதுஷான் காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
மாத்தறை - கெக்கனதுர பகுதியை சேர்ந்த இவர் மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW
you may like this video
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam