கிளிநொச்சியில் இளைஞரொருவரை காணவில்லை (PHOTOS)
கிளிநொச்சியில் இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இலக்கம் 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (16) காலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரான உதயராஜ் றோஜா தெரிவித்துள்ளார்.

மகன் தொடர்பில் தாயார் வெளியிட்ட தகவல்
காணாமல்போன தனது மகன் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ,தனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ்.சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.இன்று வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில், எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல்போயுள்ளார்.
எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புகளுக்கு
இலக்கம் 72 A கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி
தொலைபேசி இலக்கம் 0741344699
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan