ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த உறவினர் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த உறவினரை அழைத்துச் சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தங்காலை, பள்ளிக்கூடாவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற வேளையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தங்காலை, கதுருபொகுண வீதியைச் சேர்ந்த 27 வயதான லக்ஷான் என்ற திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன்
கடந்த 26 ஆம் திகதி மாலை 2 மணியளவில், இத்தாலியில் இருந்து இலங்கை வந்த மைத்துனருடன் கடலுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடற்கரையில் மது அருந்திய பின்னர், கடலில் குளிக்க சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கடலில் மூழ்கிய இளைஞனை அங்கிருந்த வெளிநாட்டவர்கள் காப்பாற்றி முதலுதவி அளித்த போதும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.
உடனடியாக தங்காலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்ற போதும், அங்கு இடவசதி இன்மையால் வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குடும்பத்தின் ஒரே மகன்
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது குடும்பத்தின் ஒரே மகன் என தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பான மரண விசாரணைகள் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றன.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam