கொழும்பில் பேருந்தில் தலையை வைத்து உயிரிழந்த இளைஞன்
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின் சக்கரத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
30 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்பான முழுமையான தகவல்களை இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி வடக்கு டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, நேற்று மாலை பயணத்தை ஆரம்பித்த போது, குறித்த இளைஞன் பேருந்தின் வலது பின்புற சக்கரத்தில் தலையை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞன் மரணம்
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அடையாளம் காணப்படாத குறித்த இளைஞன் ஒரு வகையான போதைப்பொருளுக்கு அதிகமாக அடிமையாகி உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கமைய, சாய்ந்தமருதுவில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பொலிஸார் விசாரணை
எனினும் தேசிய அடையாள அட்டைக்கு சொந்தமான இளைஞன் அந்த வீட்டில் இருப்பதையும், கொழும்பு பேருந்தில் தனது பணப்பையை யாரோ திருடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய பேருந்துகளில் பயணிப்பவர்களிடமிருந்து பணப்பைகள் உள்ளிட்ட பொருட்களை திருடும் நபராக, உயிரிழந்தவர் இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan
