புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கயிறு இழுக்கும் போட்டியின் போது, பங்கேற்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
திடீர் மரணத்திற்கான காரணம் என மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகஹவெல பகுதியை சேர்ந்த 25 வயதான சந்துன் தாரக என்ற திருமணமான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முறையான ஏற்பாடு
உள்ளூர் இளைஞர்களால் நான்காவது முறையான ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு, கடந்த 17 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது தனது மனைவியுடன் இணைந்து பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட சந்துன், கயிறு இழுக்கும் போட்டியின் முதல் சுற்றிலும் தனது குழுவினருடன் இணைந்து வெற்றி பெற்றிருந்தார்.
இறுதிப் போட்டியின் போதே அவர் எதிர்பாராத விதமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள், மாரவில ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நிரோஷன் குணசேகர மற்றும் கொஸ்வத்த பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, மாரவில ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், குறித்த இளைஞரின் மரணம் திடீர் மாரடைப்பு காரணமாகவே ஏற்பட்டுள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 23 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam