மோட்டார் சைக்கிளால் நேர்ந்த விபரீதம் - 18 வயது மாணவன் பலி: வேதனையில் தாய்
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.
தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவயது முதலே மோட்டார் சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்ட சவிது, சமீபத்தில் தனது தாயிடம் பிடிவாதம் பிடித்து புதிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
விபத்துக்கான காரணம்
விபத்து நடந்த அன்று, மோட்டார் சைக்கிளில் சென்றவாறே வீடியோ பதிவு செய்ய முயன்றபோது, நிலைதடுமாறி வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளார்.

மோதிய வேகத்தில் கம்பம் உடைந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
“அந்த மோட்டார் சைக்கிளுக்கு உயிர் இருந்தால் நான் அதை எவ்வளவு நேசித்தேன் என்று சொல்லும்” என அவர் அடிக்கடி கூறி வந்ததாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
கல்வி மற்றும் பொதுக் காரியங்களில் சிறந்து விளங்கிய மாணவனின் உடல், நண்பர்கள் மற்றும் கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கொஸ்வாடிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri