பிரித்தானிய செல்லவிருந்த இலங்கை இளைஞன் பரிதாபமாக விபத்தில் பலி
தென்னிலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலையில் நேற்று சம்பவித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 18 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் அதிவேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவன் பலி
தெற்கு குடவெல்லவை சேர்ந்த முத்துமலகே ஆதித்யா என்ற மாணவன் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவன் நகுலுகமுவ கல்லூரியின் 13 ஆம் ஆண்டில் படித்து வருகிறார். அடுத்த மாதம் உயர்கல்விக்காக பிரித்தானியா செல்ல விசா பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் அருகிலுள்ள வீட்டில் ஒரு விழாவில் இருந்தபோது, குடவெல்லவிலிருந்து மாவெல்ல நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
