கொழும்பில் திருமணமாகி 90 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கணவன்
கொழும்பின் புறநகர் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இந்த இளைஞன், மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கொட்டாவ - பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி
இந்த இளைஞன் வீட்டின் மின் விசிறியில் இயங்காமல் இருந்த மின்விசிறியை சீர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
டிப் சுவிட்ச் செயலிழந்த மின் விநியோகத்தில் இருந்து பாதுகாப்பற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தின் பிரேத பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிஷ்க விஜயதுங்க என்ற 22 வயதுடைய இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
