விபரீத முடிவால் இளைஞன் உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு, கைவலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடன் பிரச்சனையால் உயிரை மாய்ப்பதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
மனைவியை அச்சுறுத்த நாடகம்
மனைவியை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு செயற்பட்ட இளைஞன் உண்மையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இலங்கையில் உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் பலர் உயிரை மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அதில் தமிழ் இளைஞர்கள் இருவரும் அடங்கும். அவர்கள் பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |