யாழில் தொழில்வாய்ப்பை தேடுவோர் தொடர்பில் வெளியான தகவல்! கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ். மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுவதோடு பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கள் இல்லாது காணப்படுகின்றது என யாழ். அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று (22.10.2022) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ். மாவட்டத்தில் பெண்களின் தொகை மிக அதிகம். இதன் காரணமாக வேலைதேடுவோர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
இதனால் தனியார் துறையினர் தமது ஆளனிகளை பெற்றுக்கொள்ளுவதில் பல இடையூறுகள் இருக்கின்றது.
இந்நிலையில் வேலைதேடுவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகின்றது. நான் வேலைவாய்ப்பு திணைக்கள அமைச்சில் வேலை பார்க்கின்ற போது 75,000 பேரை வெளிநாட்டு தொழிலாளிகளாக இலங்கைக்கு அழைத்து இருந்தோம். இதில் 50,000 நபர்கள் கட்டுமானத்தொழில் பெறுநர்களாக இருந்தனர்.
இதில் இவர்கள் இலங்கையில் இருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்லும்போது 20,000 ஆக காணப்படுகின்றனர். உள்நாட்டில் தொழிலினை பெற்றுக்கொள்ளுவதில் நம்மவர்கள் தயாராக இல்லை.
இலகுவாக தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுகின்ற நிலைதான் அனைவரிடம் தேவையாக இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடி
இருக்கின்ற தொழிலினை எடுத்துக்கொண்டு அதனை விடுத்து அடுத்தகட்டத்தில் செல்லுவது தான் மிகசிறப்பாக இருக்கின்றது.
இந்த விடயம் தொழில்த்திறனை ஈட்டுகின்றபோது அதன் வருமானங்களை ஈட்டமுடியும். தற்போது பொருளாதார நெருக்கடி நிலவியுள்ளது.
அரச திணைக்களத்தில் உள்ள ஆட்சேர்ப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
அரச சேவையில் பல உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான மாதாந்த வேதனம் கொடுப்பது மிக கடினமாக இருக்கின்றது.
பிற மொழி அறிவு
இக்காலத்தில் சுயதொழில் கணணி அறிவு, ஆங்கில அறிவு, ஜப்பானின் கொரியன் சீனா ஆகிய மொழி அறிவினை பெற்றால் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடிகின்றது” என தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் இலங்கை மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.சஞ்சனவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
