ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்தநிலையில், விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றதே தவிர, தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை என்று அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே ஒரு சிங்களவர் இல்லை எனவே அவரை கைது செய்து தடுத்து வைத்துள்ளார்கள்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் பிரதான சூத்தரதாலி என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் அவருக்கு தண்டனை வழங்க மாட்டார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அது இந்த நாட்டின் அரசியலில் புதிய மைல்கல்லாக அமையும்.
சில விடயங்களை பௌத்த மகா சம்மேளனமும் ஏற்காது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam