போராடினால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும்: இரா.சாணக்கியன்
போராடினால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரவு பகலாக வீதியில் உறங்கும் மக்கள்
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக எரிவாயுவினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் இரவு பகலாக வீதியில் உறங்கும் நிலையேற்பட்டது.

இதனால் மட்டக்களப்பு பயனியர் வீதி உட்படப் பல இடங்களில் எரிவாயுவுக்காகக் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
இதனால் சம்பவ இடத்துக்குச் சென்று மாவட்ட அரசாங்க அதிபரையும் தொடர்பு கொண்டு மக்களின் நிலைமைகள் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
போராட்டத்தில் கிடைத்த வெற்றி

பின்பு குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு எரிவாயுவினை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
போராடினால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
அத்துடன், அரச அதிகாரிகள் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam