கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்! நிறுத்தப்படும் நடைமுறை
ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
மீறப்படும் வரையறை
நாளாந்தம் விண்ணப்பிக்கப்படும் வரையறை மீறப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் நாளாந்தம் 2500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.
இந்த மாதத்தில் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் வழங்குவதில் இனி புதிய நடைமுறை |

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
