ரக்பி விளையாட்டுக்கு விடைகொடுக்கிறார் யோசித்த!
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச தனது 15 வருட ரக்பி வாழ்க்கைக்கு விடைகொடுக்கின்றார்.
33 வயதான யோசித்த ராஜபக்ச, கொழும்பில் இன்று (02ம் திகதி) லோங்டன் பிளேஸில் இடம்பெறும் ரக்பி போட்டியுடன் அவர் விடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்,
“2004ம் ஆண்டிலிருந்து நான் விளையாட்டை விளையாடி வருகிறேன். நான் விடைபெற வேண்டிய நேரம் இது என்று உணர்ந்தேன். இப்போது எங்கள் இளைஞர்கள் உள்ளே வந்து விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் விளையாட்டின் நிர்வாகத்தில் ஈடுபட விரும்புகிறேன், ரக்பி விளையாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆனால் அந்தத் திட்டங்கள் எனது மற்ற வேலைகளைப் பொறுத்தது. இருப்பினும், ஒரு முன்னாள் வீரராக, நாட்டின் மிகவும் பின்தங்கிய ரக்பி வீரர்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யோசித்த ராஜபக்ச தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.