தாய்மொழியில் கற்று வந்தவர்களுக்கு சட்டக்கல்லூரியில் திடீரென என விதித்த நிபந்தனை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பு
காலங்காலமாக தாய்மொழியில் கற்று வந்தவர்களுக்கு சட்டக்கல்லூரியில் திடீரென ஆங்கில மொழியில் பரீட்சை எழுத வேண்டும் என விதித்த நிபந்தனை முற்றிலும் தவறானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நேற்றைய (05.12.2023) அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், “ஆங்கில மொழி பொதுவாக எல்லோருக்கும் பரீட்சயமாக கொண்டு வருதற்குரிய பத்து வருட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக கல்வியமைச்சர் மற்றும் ஏனைய துணை அமைச்சர்களையும் பாராட்ட விரும்புகிறேன்.
விதிக்கப்பட்ட புதிய நிபந்தனை
ஆங்கிலத்தில் கற்று ஆங்கிலத்தின் சாதகங்களை அறிந்தவன் என்ற வகையிலே அனைத்து மக்களுக்கும் அந்த வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும், ஒரு நிபந்தனையை முன்வைக்க விரும்புகின்றேன்.
பல தசாப்தங்களாக தமிழிலும் சிங்களத்திலும் கற்றுவந்தவர்களுக்கு திடீரென ஆங்கில மொழி பரீட்சயமாக வருவதற்கு சிறிது காலமெடுக்கும்.
காலங்காலமாக தாய்மொழியில் கற்று
வந்தவர்களுக்கு சட்டக்கல்லூரியில் திடீரென ஆங்கில மொழியில் பரீட்சை எழுத
வேண்டும் என விதித்த நிபந்தனை முற்றிலும் தவறானதாகும்.
சட்டம் என்பது நுணுக்கங்களை கொண்ட விடயம். இந்த நிலையில் பரீட்சயம் இல்லாத புதுமொழியில் திடீரென திணிக்க முயல்வது பாதிப்புக்களை ஏற்படுத்தும். மாறாக சிறிய வயதிலிருந்தே ஆங்கிலத்தில் கற்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும். இதனை நீங்கள் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அரசியல் தலையீடுகள்
அடுத்ததாக வடக்கு கிழக்கில் பாடசாலைகள் தொடர்பாக எடுத்துக்கொண்டால், இன்று மாகாண சபைகள் இயங்குநிலையில் இல்லை.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு கபினெட் அமைச்சர் வடக்கு கிழக்கு மாகாண கல்விசார்ந்த விடயங்களை தன்னுடைய சொந்த சொத்தாக பயன்படுத்தி மிக மோசமான தலையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
விசேடமாக இடமாற்றங்களில் இந்த தலையீடுகள் அதிகரித்துள்ளது. அமைச்சர் தலையிட்டு அரசியல் தலையீடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு
முறைப்படி இடமாற்றச் சபையின் முடிவுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு நிலைமையை
உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த இடமாற்றச் சபைகளில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மற்றும் திணைக்களத் தலைவர்களும் பங்குகொள்கின்றனர்.
இங்கே சகல விடயங்களும் ஆராயப்பட்டே முடிவுகள் எடுக்கப்படும். ஆகவே அரசியல் தலையீடுகள் நடைபெறாதிருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும்”என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
