இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் மூட்டைகள் தமிழகத்தில் மீட்பு(Photos)
இலங்கைக்கு கடத்த இருந்த 1500 கிலோகிராம் நிறையுடைய 40 மஞ்சள் மூட்டைகளைத் தமிழகப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்குச் சட்டவிரோதமாக இந்த மஞ்சள் மூட்டைகள் படகு மூலம் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவம்

இதன்போது சுமார் 1500 கிலோகிராம் நிறையுடைய 40 மஞ்சள் மூடைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய நாட்டுப் படகு, மஞ்சளைக் கடல் கரைக்கு ஏற்றி வந்த வாகனம் உள்ளிட்டவைகள் தனிப் பிரிவுப் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri